முல்லைப்பெரியாறு அணையில் குறையும் நீர் மட்டம்- கலக்கத்தில் விவசாயிகள்

Mullaperiyar Dam News - நெல் நடவுப்பணிகள் தொடங்கி உள்ள நிலையில் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளி்ன் நீர்மட்டம் குறைவதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Update: 2022-06-29 04:05 GMT

முல்லைப்பெரியாறு அணை (பைல் படம்)

Mullaperiyar Dam News - தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களி்ல் நெல் நடவுப்பணிகள் தொடங்கி உள்ள நிலையில் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் நெல் நடவுப்பணிகள் தொடங்கி உள்ளதால் அணையில் இருந்து விநாடிக்கு 1000ம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 272 கனஅடி தண்ணீர் மட்டுமே வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து இன்று காலை 128.40 (மொத்த நீர்மட்டம் 152 அடி) அடியாக இருந்தது. வைகை அணையில் இருந்து விநாடிக்கு 869 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கு விநாடிக்கு 505 கனஅடி நீர் வரத்து உள்ளது. நீர் மட்டம் 53.27 (மொத்த நீர்மட்டம் 71 அடி) அடியாக உள்ளது. திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் நெல் நடவுப்பணிகள் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை மாவட்டத்தில் இதுவரை வலுவாக பெய்யவில்லை. ஆறுகள், ஓடைகள், அணைகளுக்கு நீர் வரத்தும் இல்லை. இருக்கும் நீரும் குறைந்து வருவதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். ஏற்கனவே பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம், இந்த ஆண்டு வறட்சி வரும் வாய்ப்புகள் இருப்பதாக ஒரு சில ஆய்வு முடிவுகளின் படி, தனது அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன்படி நடந்து விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News