தொடர்ந்து வெளுத்து கட்டிய மழை: தேனியில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக மழை வெளுத்து வாங்கிவருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது

Update: 2022-04-13 03:00 GMT
நீர் நிரம்பி காணப்படும் வைகை அணை.

தேனி மாவட்டத்தில் மேகமலை உள்ளிட்ட சில இடங்களில் ஏப்ரல் தொடக்கம் முதலே மழை பெய்து வருகிறது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று ஐந்தாவது நாளாக மழை பெய்தது.

இன்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம் வருமாறு:

ஆண்டிபட்டியில் 31.8 மி.மீ.,

அரண்மனைப்புதுாரில் 14.4 மி.மீ., போடியில் 11.4 மி.மீ.,

கூடலுாரில் 35.7 மி.மீ.,

மஞ்சளாறில் 53 மி.மீ.,

பெரியகுளத்தில் 55 மி.மீ.,

பெரியாறு அணையில் 9.2 மி.மீ.,

தேக்கடியில் 21 மி.மீ.,

சோத்துப்பாறையில் 19 மி.மீ.,

வைகை அணையில் 43.4 மி.மீ.,

வீரபாண்டியில் 53 மி.மீ.,மழை பெய்தது.

இந்த மழையால் முல்லை பெரியாறு, சுருளியாறு, கொட்டகுடி ஆறு, வைகை ஆறு, வராகநதிகளில் நீர் வரத்து தொடங்கி உள்ளது. அதேபோல் முல்லை பெரியாறு அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணைகளுக்கும் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது.

இன்னும் 5 நாள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

Similar News