வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் 1725 பேர் விண்ணப்பம்

தேனி மாவட்டத்தில், இரண்டு நாள் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் 1725 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Update: 2021-11-22 02:00 GMT

தேனி மாவட்டத்தில் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் வாக்காளர் சேர்க்கை முகாம்கள் நடந்தன. அப்போது மழை பெய்ததால், கடந்த 21 மற்றும் 22ம் தேதிகளில் வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்த முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றன.

இந்த முகாம்களில் 969 பேர் வாக்காளர்களாக சேரவும், 439 பேர் பட்டியலில் இருந்த நீக்கவும், 133 பேர் திருத்தம் செய்யவும், 184 பேர் முகவரி மாற்றம் செய்யவும் விண்ணப்பித்துள்ளனர். ஆக மொத்தம், 1725 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்த முகாம் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெறுகிறது என தேனி மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News