தேனியில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் செல்வத்திற்கு ஆதரவாக களமிறங்கிய விஐபிக்கள்
தேனி நகராட்சி 32வதுவார்டு தி.மு.க., வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக வி.ஐ.பி.,க்கள் ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.;
தேனி நகராட்சி 32வது வார்டில் போட்டியிடும் வழக்கறிஞர் செல்வத்திற்கு ஆதரவாக தேனி நகர முக்கிய வி.ஐ.பி.,க்கள் களம் இறங்கி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
தேனி நகராட்சியில் 32வது வார்டில் தி.மு.க., வேட்பாளராக களம் வழக்கறிஞர் செல்வம் களம் இறங்கி உள்ளார். இவருக்கு சொந்த வார்டான 32வது வார்டு மட்டுமின்றி, தேனி நகரில் நல்ல பெயர் உள்ளது. குறிப்பாக வி.ஐ.பி.,க்கள் மத்தியில் மதிக்கப்படும் ஒரு நபராக வழக்கறிஞர் செல்வம் உருவெடுத்துள்ளார். தற்போது அவர் 32வது வார்டில் களம் இறங்கி உள்ளதால் செல்வத்திற்கு ஆதரவாக வி.ஐ.பி.,க்கள் பலரும் களம் இறங்கி உள்ளனர். குறிப்பாக வி.ஐ.பி.,க்கள் திரைமறைவு பிரச்சாரத்தில் ஈடுபடுவதே வழக்கம்.
அதேபோல் பலர் செல்வத்திற்கு ஆதரவாக திரைமறைவு பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், பல வி.ஐ.பி.,க்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி ஓட்டு கேட்டு வருகின்றனர். இன்று காலை நகரின் வி.ஐ.பி., பிரமுகர் டெர்ரி வழக்கறிஞர் செல்வம் குழுவினருடன் சென்று அவருக்கு ஓட்டு சேகரித்தார். இன்று மாலை அமைச்சர் ஐ.பெரியசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் ஆகியோர் செல்வத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.