காய்கறி ஏற்றுமதி செய்ய தேனியில் 74 கிராமங்கள் தேர்வு..!

Theni District News -தேனி மாவட்டத்தில் 74 கிராமங்களை தேர்வு செய்து காய்கறிகளை விளைவித்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

Update: 2023-12-08 04:46 GMT

காய்கறி சாகுபடி (கோப்பு படம்)

Theni District News -தேனி மாவட்டத்தில் மொத்தம் 88 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பில் காய்கறிகள், பழமரங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் தரமான மண் வளம், நீர் வளம் கொண்ட 74 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு தக்காளி, வெண்டைக்காய், கத்தரி, முருங்கை, பச்சைமிளகாய், கோவங்காய், காலிபிளவர், வாழை, பழவகைகள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றை சேகரிக்க மாவட்டத்தில் 21 இடங்களில் காய்கறி, பழங்கள் சேகரிப்பு மையங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் சேகரிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கம்பம், சின்னமனுார், தேனி, கெங்குவார்பட்டியில் கட்டப்பட்டுள்ள முதன்மை பதனிடும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பதப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்படுகிறது. இதன் பின்னர் ஆன்லைன் வர்த்தகம் மூலம் இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யப்படுகின்றன. 

வாங்குபவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவே வாங்குவார்கள். அந்த அளவிற்கு முதன்மை பதப்படுத்தும் மையங்களில் காய்கறி, பழங்கள் தரம் உயர்த்தப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து தினமும் 74 டன் காய்கறிகள், பழங்கள் இதன் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு 20 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்களில் தேனி மாவட்டத்தில் இருந்து காய்கறி ஏற்றுமதி தொடங்கும் என தேனி மாவட்ட விற்பனைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News