கிராம சுகாதார செவிலியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தக்கூடாது என வலியறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தேனி மாவட்ட கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை நிறுத்த வேண்டும். தினமும் இலக்கு நிர்ணயித்து இவ்வளவு தடுப்பூசி போட வேண்டும் என நெருக்கடி தரக்கூடாது. வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை செயல்படுத்த எங்களை வலியுறுத்தக்கூடாது . பிற நாட்களில் நடத்தப்படும் கொரோனா தடுப்பூசி முகாம்களை மாலை 5 மணிக்கு நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.