புரட்டாசி மாத பிறப்பையொட்டி காய்கறி விலைகள் உயர்வு

Theni News Today -தேனி மாவட்டத்தில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி காய்கறிகளின் விலைகள் சற்று உயர்ந்துள்ளன.;

Update: 2022-09-19 03:49 GMT

பைல் படம்.

Theni News Today -தேனி மாவட்டத்தில் காய்கறிகளின் சீசன் தொடங்கி உள்ளது. மார்க்கெட்டிற்கு வரத்து அதிகம் உள்ளது. இதனால் விலைகள் சற்று குறைவாகவே இருந்தன. கடந்த ஆவணி மாதம் முகூர்த்தங்கள் இருந்தாலும், விலைகள் பெரிய அளவில் உயரவில்லை.

இந்நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் விலைகளில் சற்று உயர்வு தெரிகிறது. தேனி உழவர்சந்தையில் ஒரு கிலோ தக்காளி கிலோ 32 ரூபாய், கத்தரிக்காய் 49 ரூபாய், வெண்டைக்காய் 30 ரூபாய், பாகற்காய் 40 ரூபாய், முருங்கைக்காய் 45 ரூபாய், அவரைக்காய் 70 ரூபாய், தேங்காய் 28 ரூபாய், கொத்தமல்லித்தழை 120 ரூபாய், டர்னிப், சவ்சவ், காலிபிளவர் தலா 40 ரூபாய், காரட் 65 ரூபாய் சோயாபீன்ஸ் 110 ரூபாய் என விற்கப்படுகிறது. இதேபோல் அனைத்து காய்கறிகளின் விலைகளும் சற்று உயர்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News