தேனி மாவட்டத்தில் காய்கறிகள் விலை மீண்டும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

தேனி மாவட்டத்தில் தக்காளி மட்டுமல்ல, ஏழு காய்கறிகளின் விலை கிலோ 100 ரூபாயினை தாண்டி உள்ளது.

Update: 2021-12-04 02:09 GMT

தேனி மாவட்டத்தில் சில்லரை மார்க்கெட்டில் ஏழு காய்கறிகளின் விலை கிலோ 100 ரூபாயினை தாண்டி விற்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், முருங்கை பீன்ஸ், பட்டர்பீன்ஸ், துவரங்காய் ஆகிய ஏழு காய்கறிகளின் விலை சில்லரை மார்க்கெட்டில் கிலோ 100 ரூபாயினை கடந்துள்ளது. மொச்சக்காய் கிலோ 80 ரூபாயினை எட்டியுள்ளது. பச்சைப்பட்டாணி, டர்னிப், முள்ளங்கி, நுால்கோல், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை கிலோ 50 ரூபாயினை தாண்டி உள்ளது.

இந்த விலை அதிகரிப்பால் பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதை பெருமளவில் குறைத்துக் கொண்டனர். இதனால் வியாபாரம் மிகவும் டல்லாக இருப்பதாகவும், தினசரி அதிகளவு காய்கறிகள் விற்பனையாகாமல் தேங்குவதால், பலத்த நஷ்டம் ஏற்படுவதாகவும் காய்கறி சில்லரை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News