பண்டிகை காலம் தொடங்கியதால் காய்கறிகளின் விலை சற்று உயர்வு
பண்டிகை காலம் தொடங்கியதால், தேனி உழவர்சந்தையில் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது.
இன்று முதல் பொங்கல் பண்டியை தொடங்குகிறது. நாளை போகிப்பொங்கல் (காப்பு கட்டு) தொடங்குகிறது. அடுத்து பொங்கல் விழா, மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விழா கொண்டாடப்படும். இந்த காலகட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டும் அசைவம் சாப்பிடுவார்கள். மிகப்பெரும்பாலான மக்கள் சைவம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால் காய்கறிகளின் தேவை சற்று அதிகரித்துள்ளது. இதனால் விலைகளும் சிறிதளவு உயர்ந்துள்ளன. வழக்கமாக திருவிழா காலங்களில் இருக்கும் விலை உயர்வினை விட இந்த ஆண்டு விலை குறைவாகவே விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இன்று தேனி உழவர்சந்தை விலை நிலவரம்:
கிலோவிற்கு ரூபாயில்:
கத்தரிக்காய் - 42,
தக்காளி - 30,
வெண்டைக்காய் - 54,
கொத்தவரங்காய் - 40,
சுரைக்காய் - 18,
புடலங்காய் - 28,
பாகற்காய் - 50,
முருங்கைகாய் - 75,
பூசணிக்காய் - 25,
பச்சைமிளகாய் - 50,
பட்டை அவரைக்காய் - 55,
தேங்காய் - 32,
உருளைக்கிழங்கு - 40,
கருணைக்கிழங்கு - 50,
சேப்பங்கிழங்கு - 60,
வெற்றிலை வள்ளிக்கிழங்கு - 45,
கருவேப்பிலை - 50,
கொத்தமல்லி - 40,
புதினா - 35,
சின்னவெங்காயம் - 48,
பெரிய வெங்காயம் - 35,
இஞ்சி - 110,
வெள்ளைப்பூண்டு - 280,
வாழைஇலை மடி - 25,
வாழைப்பூ - 10,
வாழைத்தண்டு - 10,
பீட்ரூட் - 40,
நுால்கோல் - 36,
முள்ளங்கி - 34,
முருங்கை பீன்ஸ் - 84,
பட்டர்பீன்ஸ் - 160,
சோயாபீன்ஸ் - 90,
செலக்ஷன் பீன்ஸ் - 68,
முட்டைக்கோஸ் - 22,
கேரட் - 58,
டர்னிப் - 40,
சவ்சவ் - 18,
காலிபிளவர் - 30,
பச்சைப்பட்டாணி - 78,
சேம்பு - 65,
மொச்சைக்காய் - 80,
துவரங்காய் - 65,
தட்டாங்காய் - 45,
கீரை வகைகள் - 25.
பழங்களின் விலை:
எலுமிச்சை - 65,
ஆப்பிள் - 180,
ஆரஞ்சு - 100,
பப்பாளி - 25,
திராட்சை - 160,
மாதுளைபழம் - 100 என விற்கப்படுகிறது.