தேனியில் தக்காளி விலை மீண்டும் ‘‘விர்’’

தேனி உழவர்சந்தையில் தக்காளி விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Update: 2023-07-15 04:12 GMT

தேனி உழவர்சந்தை.

தமிழ்நாடு மட்டுமல்ல. தென் மாநிலங்கள் முழுவதும் தக்காளி, சின்ன வெங்காயம் விளைச்சல் கடுமையான பாதிப்பில் சிக்கி உள்ளதால், விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது. தேனி மார்க்கெட்டிலேயே தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயினை தொட்டது. சின்ன வெங்காயம் ரூ.135ஐ தாண்டியது. சில்லரை மார்க்கெட்டில் தக்காளி கிலோ 130 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களாக விலை சற்று குறைந்தது. தேனி உழவர் சந்தையில் தக்காளி கிலோ 60 ரூபாய் வரை இறங்கியது. முதல் தர தக்காளியே கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில நாட்கள் மட்டுமே இந்த விலை நிலவரம் கட்டுக்குள் இருந்தது. இன்று காலை மீண்டும் உழவர்சந்தை விலை கிலோ 85 ரூபாயினை தாண்டியது. சில்லரை மார்க்கெட் விலை 120 ரூபாயினை தாண்டி உள்ளது. மற்ற அனைத்து காய்கறிகளின் விலைகளும் சற்று உயர்ந்தே உள்ளன.

தேனி உழவர்சந்தை காய்கறி விலை நிலவரம்: கிலோவிற்கு ரூபாயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தரிக்காய்- 34, வெண்டைக்காய்- 36,

கொத்தவரங்காய்- 40, சுரைக்காய்- 20,

புடலங்காய்- 36, பாகற்காய்- 50,

பீர்க்கங்காய்- 50, முருங்கைக்காய்- 36,

பச்சைமிளகாய் (உருட்டு)- 100, அவரைக்காய்- 60,

உருளைக்கிழங்கு- 25, சேப்பங்கிழங்கு- 64,

வள்ளிக்கிழங்கு- 30, கருவேப்பிலை- 36,

கொத்தமல்லி- 45, புதினா- 50,

இஞ்சி- 260, வெள்ளைப்பூண்டு- 280,

பீட்ரூட்- 36, நுால்கோல்- 50,

முள்ளங்கி- 22, முருங்கைபீன்ஸ்- 95,

பட்டர்பீன்ஸ்- 120, சோயாபீன்ஸ்- 120,

முட்டைக்கோஸ்- 30 கேரட்- 54,

டர்னிப்- 54. சவ்சவ்- 25,

காலிபிளவர்- 35, சேம்பு- 60,

கீரைவகைகள்- 25.

Tags:    

Similar News