வீரப்ப அய்யனார் மலைக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

தேனி வீரப்ப அய்யனார் மலைக்கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update: 2022-03-29 10:46 GMT

சித்திரை திருவிழா கொடியேற்றத்திற்கு பின்னர் தேனி வீரப்பஅய்யனார் வீதியுலா வந்தார்.

தேனியில் இருந்து ஆறு கி.மீ., தொலைவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது வீரப்பஅய்யனார் கோயில். இங்குள்ள கோயிலில் வழிபடாமல், தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, வடபுதுப்பட்டி, அன்னஞ்சி உட்பட பல பகுதி மக்கள் எந்த செயலையும் தொடங்குவதில்லை. வீரப்ப அய்யனாரை இங்குள்ள மக்கள் தங்கள் குடும்பத்தில் ஓருவராகவே பாவித்து வருகின்றனர்.

வரும் ஏப்., 14ம் தேதி சித்திரை திருவிழா அன்று இந்த கோயிலில் மிகப்பெரிய அளவில் விழா கொண்டாடப்படும். தேனியின் மிகப்பெரிய திருவிழாவே இந்த விழாதான். ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து வீரப்ப அய்யனாரை வழிபட்டு செல்வார்கள். பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பக்காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை பல ஆயிரம் செலுத்துவார்கள்.

ஆறு கி.மீ., தொலைவிலும் ரோட்டின் இரு பக்கமும் தண்ணீர் பந்தல், மோர்பந்தல், உணவுப்பந்தல் அமைத்து நீர், மோர், உணவுகளை பக்தர்களுக்கு வழங்கி நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். இந்த விழாவிற்காக இன்று காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பின்னர் சாமி வீதியுலா வந்தார். சித்திரை திருவிழா ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராம கமிட்டி தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் சிவராமன், செயலாளர் தாமோதரன், துணைச் செயலாளர் வீரமணி, பொருளாளர் முருகன் உட்பட கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News