வீரபாண்டியில் கூட்டம் அலைமோதியும் உண்டியல் வசூல் குறைந்தது என்ன காரணம்.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழாவில் இந்த ஆண்டு கூட்டம் அலை மோதியும் உண்டியல் வசூல் மிகவும் குறைவாக இருந்தது.

Update: 2022-06-02 04:45 GMT

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயி்ல் விழா மே 10ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை நடைபெற்றது. இந்த காலகட்டங்களில் கூட்டம் மிகவும் அதிகமாகவே இருந்தது.வழக்கம் போல் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 22 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் கோயிலுக்கு சென்ற மக்கள் திருவிழாவில் பங்கேற்று கொண்டாடினர். கோயிலுக்கு சென்று சாமியை வழிபட்டனர். பூஜாரிகளுக்கு தட்டில் பணம் போட்டனர். ஆனால் உண்டியல்களில் பெரும்பாலானோர் பணம் போடவில்லை. இதனால் சித்திரை திருவிழா உண்டியல் வசூல் 12 லட்சத்து 43 ஆயிரம் மட்டுமே இருந்தது.

இது வழக்கத்தை விட மிகவும் குறைவு ஆகும். இவ்வளவு காலம் உண்டியல் வசூல் செய்தும், இந்து சமய அறநிலையத்துறை எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. இதனால் கோயில் நிர்வாகத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததே உண்டியல் வசூல் குறைந்ததற்கு முக்கிய காரணம் என பக்தர்கள் புகார் எழுப்பினர்.

Tags:    

Similar News