வைகை நீர் மட்டம் ஓரு அடி குறைந்தது, முல்லை பெரியாறு நீர் மட்டம் லேசாக குறைவு

தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை இல்லை. இதனால் அணைகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து விட்டது.;

Update: 2021-12-26 04:04 GMT

முல்லை பெரியாறு அணை  பைல் படம்.

தேனி மாவட்டத்தில் வைகை அணை நீர் மட்டம் ஒரு அடியும், முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் புள்ளி 35 அடியும் குறைந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை இல்லை. இதனால் அணைகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து விட்டது.வைகை ஆற்றில் விநாடிக்கு 414 கனஅடி மட்டுமே நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 869 அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணை நீர் மட்டம் 70.55 அடியில் இருந்து 69.55 அடியாக குறைந்துள்ளது. ஒரு அடி மட்டுமே நீர் மட்டம் குறைந்துள்ளது.

முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 141.65 அடியாக உள்ளது. அணை நீர் மட்டம் 142 அடியில் இருந்து புள்ளி 35 அடி மட்டுமே குறைந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 458 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் தமிழகப்பகுதி வழியாக வெளியேற்றப்படுகிறது.மஞ்சளாறு அணை நீர் மட்டம் 53.90 (மொத்தநீர் மட்ட உயரம் 57 அடி) அடியாக குறைந்துள்ளது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 126.31 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் முழு நீர் மட்ட உயரம் 126.28 அடியாகும். சண்முகாநதி நீர்மட்டம் 47.80 அடியாக உள்ளது. இதன் மொத்த நீர் மட்ட உயரம் 52.55 அடியாகும்.

Tags:    

Similar News