தேனி மாவட்டத்தில் வைகை அணை திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
முழு கொள்ளளவை எட்டியதால் தேனி மாவட்டத்தில் வைகை அணை நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டது.
வைகை அணை முழு கொள்ளவை எட்டியதால் நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணைக்கு விநாடிக்கு 3457 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணை நீர் மட்டம் நேற்று நள்ளிரவு 69 அடியை எட்டியதால் அணையில் இருந்து கரையோர மக்களுக்கு 3 வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணை திறக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து 3457 கனஅடியாகவும், நீர் திறப்பு 2569 கனஅடியாகவும், நீர் மட்டம் 69.24 அடியாகவும் உள்ளது.