66 அடியை தாண்டியது வைகை அணை: இன்று முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை நீர் மட்டம் 66 அடியை கடந்துள்ளது. நீர் வரத்து அதிகம் இருப்பதால் இன்று முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.;

Update: 2021-11-06 13:16 GMT

வைகை அணை நீர் மட்டம் அறுபத்திஆறு அடியை தாண்டி உள்ளது.

வைகை அணை 66 அடியை தாண்டி உள்ளதால் இன்று முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 4168 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 969 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதாலும், நீர் வரத்து அதிகம் இருப்பதாலும் அணை இன்று மாலை அல்லது இரவு 67 அடியை எட்டும். உடனே முதல் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி போடியில் 55.6 மி.மீ., வீரபாண்டியில் 35 மி.மீ., பெரியகுளத்தில் 45 மி.மீ., சோத்துப்பாறையில் 30 மி.மீ., தேக்கடியில் 16.4 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பதிவாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News