தேனி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட 6,83,844 பேர்

தேனி மாவட்டத்தில் மொத்தம், 6,83,844 பேர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-19 12:30 GMT

தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டியில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரிசையில் நின்றிருந்த மக்களுடன் கலெக்டர் முரளீதரன் பேசி, ஊக்கப்படுத்தினார்.

தேனி மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 13 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் இதுவரை மாவட்டத்தில் 6 லட்சத்து 83 ஆயிரத்து 844 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 113 பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதில், செப்டம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடந்த முகாம்களில் மட்டும், 6660 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை,  கலெக்டர் முரளீதரன் நேரடியாக கவனித்து வருகிறார் என தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News