அணு ஆயுத போரை நோக்கி நகரும் அமெரிக்கா- ரஷ்யா

ரஷ்ய உக்ரைன் போரில் அமெரிக்க தரப்பும் ரஷ்ய தரப்பும் அடுத்தடுத்த கட்ட தாக்குதல் வியூகத்துக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது

Update: 2023-04-06 04:15 GMT

பைல் படம்

ரஷ்ய உக்ரைன் போரில் அமெரிக்க தரப்பும் ரஷ்ய தரப்பும் அடுத்தடுத்த கட்ட தாக்குதல் வியூகத்துக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது.

விடாகண்டன்களான இருநாடுகளும் தங்கள் நாட்டை விட்டு இன்னொரு நாட்டில் தான் பல விஷயங்களை பரிசோதித்து பார்க்கும் தந்திரம் தெரிந்தவை. அதையே இங்கும் செய்கின்றன. ரஷ்யாவினை ஒட்டியிருக்கும் நாடு உக்ரைன் என்றாலும் ரஷ்யா தன் அணு ஆயுதத்தை அண்டை நாடான பெலாரஸிற்குத் தான் நகர்த்தியிருக்கின்றது. அதன்படி இனி உக்ரைன்மேல் அணுஆயுத தாக்குதல் என்றால் அதனை உக்ரைனில் இருந்து தான் நடத்தும். பதிலுக்கு அமெரிக்கா போலந்தில் தன் அணு ஆயுதங்களை நிறுவி விட்டது. நிச்சயம் இது பதற்றமான நேரம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இரு தரப்பும் மென்மேலும் வரிந்து கட்டுகின்றது. நவீன டாங்கிகளை நேட்டோ உக்ரைனுக்கு கொடுக்கின்றது. இன்னும் ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி பின்லாந்து நேட்டோவில் சேர்ந்து விட்டது. தற்போது ஸ்வீடனை நேட்டோவில் சேர்க்கும் நடவடிக்கை தொடர்கின்றது.

கிரிமியாவினை மீட்கும் போரை தொடங்குவோம் என செலன்ஸ்கி எச்சரிக்கின்றார். ரஷ்யா தன் வழமையான வசனமான "சிகப்பு கோட்டை கடக்க வேண்டாம்" என சொல்லிக் கொண்டிருக்கின்றது. ரஷ்யாவின் "சிகப்பு கோடு" வசனம் பிரசித்தியானது, செஞ்சதுக்கமும் செங்கொடியும் கொண்டிருந்த நாடு என்பதாலோ என்னவோ அவர்களுக்கு பிடித்த நிறம் சிகப்பு போலிருக்கின்றது. உக்ரைன் போருக்கு முன்பிருந்தே இந்த வசனம் பிரசித்தி. ஆனால் அந்த கோட்டை பலமுறை தாண்டியும் நேட்டோ தரப்பு கபடி ஆடிய பின்பும் அதே வசனத்தை ரஷ்யா இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றது.

தற்போது இருபக்கமும் மறுபடியும் வரிந்து கட்டுகின்றார்கள். இந்த போர் இனி அடுத்த பரிணாமத்தை எட்டலாம். இதுவரை போரின் போக்கில் ரஷ்யா நினைத்த எதையும் சாதிக்கவில்லை, உக்ரைனில் ஆட்சிமாற்றமோ உக்ரைன் எல்லைக்கு நேட்டோ ஆயுதமோ வரகூடாது எனும் மிரட்டலெல்லாம் பொய்த்து ரஷ்யா எதை விரும்பவில்லையோ அதெல்லாம் மிக சரியாக நடந்து விட்டது.  இப்போது ரஷ்ய நகரங்கள் கடும் பாதுகாப்பில் வருகின்றன. ரஷ்ய தொழில் நிறுவனங்கள் குறிப்பாக எண்ணேய் நிறுவனங்கள் சொந்த செலவிலே ஆளில்லா விமான தடுப்பு சாதனம் நிறுவ வேண்டும் என்கின்றது ரஷ்யா. ஆக எதையோ ரஷ்யர்கள் எதிர்பார்க்கின்றார்கள் அப்படி ஒரு தாக்குதலை உக்ரைன் தரப்பும் எதிர்பார்க்கின்றது, இரு தரப்பு அணு ஆயுதங்களும் நகர்த்தப்பட்டிருக்கின்றன. ஒரு கொதிநிலையினை இந்த யுத்தம் எட்டியிருக்கின்றது.

Tags:    

Similar News