தேவதானப்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தேவதானப்பட்டி அருகே காமாட்சியம்மன் கோயிலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.;

Update: 2022-03-17 05:27 GMT

பைல்படம்.

தேவதானப்பட்டி அருகே காமாட்சியம்மன் கோயிலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 

தேனி கலெக்டர் முரளீதரனை தேவதானப்பட்டி பசுமை இயக்க விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் தேவதானப்பட்டி பகுதியில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. அறுவடையும் தொடங்கி உள்ளது. எனவே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வசதியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் முரளீதரன் உறுதி அளித்தார்.

Tags:    

Similar News