நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

தேனி மாவட்டத்தில் 24 மணி நேரமும் பறக்கும் படையின் கண்காணிப்பு பணிகள் தொடங்கியது என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-01-28 14:17 GMT

தேனி கலெக்டர் முரளீதரன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

தேனி மாவட்டத்தில் 84 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகளில் 177 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 22 பேரூராட்சிகளில் 336 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால் அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 24 மணி நேரமும் பறக்கும் படை கண்காணிப்பு பணியில் ஈடுபடும்.

ஒரு பறக்கும்படை 8 மணி நேரம் பணிபுரியும். அடுத்த 8 மணி நேரத்திற்கு வேறு பறக்கும் படை வந்து விடும். எந்த நிலையில் 4 பறக்கும் படை பணிக்கு வரும் வகையில் தயார் நிலையில் இருக்கும். ஆக மாவட்டத்தில் 84 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையின் தனது கண்காணிப்பு பணிகளை தொடங்கி விட்டனர் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News