நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தேனியில் தி.மு.க.,வினர் விருப்ப மனு வழங்கல்
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.,வினர் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.,வினர் ஆர்வத்துடன் விருப்ப மனு பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகளிலும் இன்றும், நாளையும் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்தந்த நகர செயலாளர்கள் தலைமையில் மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
போடியில் இப்பணியினை வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். தேனியில் நகர செயலாளர் பாலமுருகன் விருப்ப மனுக்களை வழங்கினார். நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து பலரும் மனுக்கள் வாங்கி வருகின்றனர்.