தேனி மாவட்டத்தில் அவசர காலங்களில் பயன்படாத ஆம்புலன்ஸ் 108
Ambulance Number 108 - தேனி மாவட்டத்தில் 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் சமீப காலமாக சரிவர இயங்கவில்லை என புகார் கூறப்பட்டு வருகிறது.
Ambulance Number 108 -ஆம்புலன்ஸ்களில் பைலட் சார்டேஜ், ஈ.எம்.டி. சார்டேஜ், சர்வீஸ், எப்.சி, பணிமனை வேலை என்ற பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு, பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர தேனி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் அவசர தேவையின் போது ஆம்புலன்ஸ்கள் இல்லாமல் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
இது குறித்து, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் பல முறை புகார் தெரிவித்தும் பயனில்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இனி வருங்காலங்களில் இது போன்ற காரணங்களால், தேனி மாவட்டத்தில் அவசர காலங்களில் நோயாளிகளுக்கு உதவுவதாக, பெயரளவில் செயல்படாமல், அனைத்து வாகனங்களையும் முறையாகவும், விரைவாகவும் இயக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2