வீரபாண்டி கோவில் திருவிழா முடியும் வரை முல்லையாற்றில் பரிகார பூஜைகள் ரத்து

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா முடியும் வரை முல்லையாற்றங்கரையில் பரிகார பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-22 03:19 GMT

வீரபாண்டி கௌமாரியம்மன்கோவில் (பைல்படம்).

தேனி அருகே வீரபாண்டியில் முல்லையாற்றின் கரையில் அமைந்துள்ளது கண்ணீஸ்வரமுடையார் கோயில், கவுமாரியம்மன் கோயில். இங்குள்ள ஆற்றங்கரையில் தினமும் தர்ப்பணம், ஈமக்கிரியை வழங்கல் உள்ளிட்ட பரிகார சடங்குகள் நடத்தப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு திருவிழா தற்போது தொடங்கி உள்ளது. கம்பம் நடுதல் தொடங்கி உள்ளதால் பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றுவது உள்ளிட்ட அம்மனுக்கான நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

இந்த நேர்த்திக்கடன்கள் முல்லையாற்றங்கரையில் தொடங்கி, கவுமாரியம்மன் கோயில் வரை நடைபெறும். திருவிழா மே மாதம் 17ம் தேதி வரை நடைபெறுது. மே 18ம் தேதியும் பூஜைகள், ஊர்பொங்கல் நடைபெறும். எனவே மே மாதம் 20ம் தேதி வரை பரிகார பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கோயி்ல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News