போடி அருகே டூவீலர்-பள்ளி பேருந்து மோதி விபத்து: முன்னாள் ராணுவ வீரர் சாவு
போடி அருகே இரு சக்கர வாகனத்தில் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் முன்னாள் ராணுவவீரர் பலியானார்.;
தேனி மாவட்டம், போடி வ.உ.சி., நகரை சேர்ந்தவர் சுரேஷ், 40. முன்னாள் ராணுவவீரரான இவர், தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் போடியில் இருந்து தேனிக்கு டூ வீலரில் வந்து கொண்டிருந்த போது, தோப்புபட்டி அருகே எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் மோதியது. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.