நாய் மீது டூ வீலர் மோதிய விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் உயிரிழப்பு
நாய் மீது டூ வீலர் மோதிய விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்
தேனி அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தவர் நாகராஜன், 54. காமாட்சிபுரத்தை சேர்ந்த இவர், டூ வீலரில் தேனி சென்று விட்டு ஜங்கால்பட்டி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஜங்கால்பட்டி அருகே வேகமாக வந்து போது, நாய் குறுக்கே வந்தது. நாய் மீது மோதிய விபத்தில் டூ வீலர் தடுமாறி ரோட்டோர மின்கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஓடைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.