சொத்து வரி ரசீதுக்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர் கைது

பூமலைக்குண்டு ஊராட்சியில், சொத்து வரி ரசீது வழங்க லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-14 05:09 GMT

பைல் படம்.

தேனி தர்மாபுரியை சேர்ந்தவர் அருள்குமார் 26. கோழிப்பண்ணை உரிமையாளரான இவர் பூமலைக்குண்டு கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் 3.5 ஏக்கரில் கோழிப்பண்ணை அமைத்தார். அங்கு கட்டடம் கட்டினார். மின் இணைப்பு பெற ஊராட்சி நிர்வாகத்திடம் சொத்து வரி ரசீது கேட்டார். ஊராட்சி செயலாளர் செந்தில் ஆண்டவர் 37, ஊராட்சி தலைவியின் கணவர் முருகன் ஆகியோர் 17 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டனர்.

இது பற்றி தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் அருள்குமார் புகார் செய்தார். போலீசார் 12 ஆயிரம் ரூபாய் வேதிப்பொருள் தடவிய நோட்டினை கொடுத்து லஞ்சம் கொடுக்குமாறு அருள்குமாரிடம் அறிவுறுத்தினர். அருள்குமார் இந்த பணத்தை முருகனிடம் கொடுத்தார். அப்போது போலீசார் கைது செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் செந்தில் ஆண்டவருக்கும் பங்கு இருப்பது தெரிந்ததால், முருகனையும், செந்தில் ஆண்டவரையும் கைது செய்தனர். மேலும் சிலரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் செந்தில் ஆண்டவரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News