கம்பத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கிய இருவர் கைது: போலீசார் அதிரடி

கம்பத்தில் புகையிலை பொருட்களை பதுக்கியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-07 15:21 GMT

கம்பத்தில் பதுக்கல் கும்பலிடம் இருந்து போலீசார் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா, எஸ்.ஐ.,ஜெயபாண்டியன் தலைமையில் போலீசார் மின்வாரிய அலுவலகம் அருகே பைபாஸ் ரோடு சந்திப்பில் ரோந்து சென்றனர். அங்கு புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கம்பத்தை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த வாரம் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்தும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இருப்பினும் கம்பத்தில் புகையிலை பொருட்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News