ஆதரவற்றவர்களுக்கு கரம் கொடுத்த கொடையாளிகளுக்கு பாராட்டு விழா
பெரியகுளம் அரசு மருத்துவமனை ஆதரவற்றோர் மனநல சிகிச்சை மையத்திற்கு உதவிய சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.;
தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்டோர் நல சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவிற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் உணவு, உடைகள், மருந்துகளுக்கு நிதி உதவி போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
மருத்துவ இணை இயக்குனர் லட்சுமணன் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார், மருத்துவர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜ்மோகன் பங்கேற்று நன்கொடை கொடுத்து உதவியவர்களுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கினார்.