கம்பம், பெரியகுளம், தேனி அரசு மருத்துவமனைகளில் விரைவில் கண்புரை சிகிச்சை வசதி

கம்பம், பெரியகுளம் அரசு மருத்துவமனைகள், தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் கண்புரை ஆபரேசன் சிகிச்சை வசதிகள் தொடங்கப்பட உள்ளது.

Update: 2022-05-21 03:34 GMT

தமிழக பார்வை இழப்பு தடுப்பு திட்ட இயக்குனர் சந்திரக்குமார் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி டீன் பாலாஜிநாதனுடன் ஆலோசனை நடத்தினர். கண் மருத்துவத்துறைத்தலைவர் கணபதிராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் இயக்குனர் சந்திரக்குமார் பேசியதாவது: தமிழகத்தில் கண்புரை இல்லாத மாவட்டங்களை உருவாக்க தேவையான வசதிகளை செய்து வருகிறோம். மாநிலத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 140 பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் மூலம் குறிப்பிட்ட சில மாவட்டங்களை முதலில் கண்புரை இல்லாத மாவட்டங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். தேனி மாவட்டத்தில் கம்பம், பெரியகுளம் அரசு மருத்துவமனைகள், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் கண்புரை சிகிச்சை வசதிகளை உருவாக்க உள்ளோம்  என தெரிவித்தார். 

Tags:    

Similar News