மதுரையில் கதர்கிராம தொழில் ஆணையத்தின் பயிற்சி வகுப்புகள்!

மதுரையில் கதர் கிராம தொழில் ஆணையத்தின் சார்பில் பல்வேறு தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

Update: 2024-10-23 02:34 GMT

மதுரையில் கதர்கிராம தொழில் ஆணையத்தின் பயிற்சி வகுப்புகள் (கோப்பு படம்)

மதுரையில் இயங்கும் வாப்ஸ் நிறுவனம், கதர் கிராம தொழில் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையமாக உருவாகி உள்ளது. இதன் மூலம், மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் பெண்கள் பலர் பல்வேறு சுயதொழில் பயிற்சிகளை கற்றுக் கொண்டு தொழில் முனைவோர் ஆகும் வாய்ப்பு உள்ளது.

வாப்ஸ் நிறுவனம் மூலம் தையல், எம்ப்ராய்டரி, சோப் மற்றும் ஷாம்பு தயாரிப்பு, தேனீ வளர்ப்பு , பழங்கள் காய்கறிகள் மதிப்பு கூட்டுதல், மசாலா பொருட்கள் தயாரிப்பு, மூலிகை சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, துரித உணவு தயாரித்தல் உள்பட 20 வகையான சுயதொழில் பயிற்சிகள் வாப்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளது.

வாழ்க்கையில் ஏதாவது சுயதொழில் செய்து சொந்தக் காலில் நின்று சாதிக்க வேண்டும் என்று கனவு காணும் அனைவருக்கும் வாப்ஸ் நிறுவனம் மூலம் நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது. பயிற்சியின் முடிவில் காதி கிராம தொழில் ஆணையத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.

சுயதொழில் பயிற்சிகள் குறித்து விபரம் வேண்டுவோர் மற்றும் பயிற்சிகளில் சேர விரும்புவோர் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வாப்ஸ், 39.பெசன்ட் சாலை, (பிடிஆர் மகால் பின்புறம்) சொக்கிகுளம், மதுரை என்ற முகவரியிலும், Tel :0452-2538641 Mobile : 63749 85138 ,6379763621,என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

Similar News