தேனி மாவட்டத்தில் மொத்தம் 15,62, 687 பேருக்கு தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் இதுவரை 15 லட்சத்து 62 ஆயிரத்து 687 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-04-03 02:00 GMT

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை கலெக்டர் முரளீதரன் ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 14 லட்சத்து 43 ஆயிரத்து 799 பேரும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 91 ஆயிரத்து 354 பேரும், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 27 ஆயிரத்து 534 பேரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாகவே கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவும் இல்லை. யாரும் சிகிச்சை பெறவும் இல்லை. தினமும் சராசரியாக 150 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரை தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News