குறைந்தது சின்னவெங்காயம் விலை... தக்காளி விலை மட்டும் குறையவில்லை..!

தேனி உழவர்சந்தையில் சின்னவெங்காயத்தின் விலை குறைந்துள்ள நிலையில், தக்காளியின் விலை பழைய நிலையிலேயே உள்ளது.

Update: 2023-07-28 09:45 GMT

தேனி உழவர் சந்தை.

தேனி உழவர் சந்தை தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் உழவர்சந்தைகளில் சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் முழு வெற்றி என்பது தேனி உழவர் சந்தை நிர்வாகத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம். இங்கு தினமும் சராசரியாக 75 விவசாயிகள் வரை விளைபொருட்களை கொண்டு வருகின்றனர். சந்தைக்கு வெளியே 40க்கும் மேற்பட்டோர் கடை விரித்துள்ளனர். தினமும் சுமார் 6 ஆயிரம் பேர் வரை வந்து காய்கறி வாங்கிச் செல்கின்றனர். காலை 9 மணிக்குள் இவ்வளவு பேரும் வந்து காய்கறி வாங்கிச் சென்று விடுவார்கள். காலை 10 மணி அல்லது 10.30 மணிக்கெல்லாம் சந்தை வெறிச்சோடி விடும். 11 மணிக்கு மூடி விடுவார்கள். அந்த அளவு வியாபாரம் கொடி கட்டிப்பறக்கும்.

இங்கு சுத்தமான சூழலில், காய்கறிகள் அனைத்தும் புத்தம் புதிதாகக்கிடைக்கும். தவிர விலைகளும் வெளிமார்க்கெட்டை விட 25 முதல் 30 சதவீதம் வரை குறைவாக இருக்கும். வெளி மார்க்கெட்டில் தக்காளி கிலோ 125 ரூபாய்க்கு தற்போது விற்பனையாகிறது. உழவர் சந்தையில் 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் 100 ரூபாய் என்ற விலையிலேயே நீடிக்கிறது. உழவர் சந்தையில் 74 ரூபாய்க்கு குறைந்து விட்டது.

பிற காய்கறிகளின் விலை நிலவரம் வருமாறு (கிலோவிற்கு ரூபாயில் குறிப்பிடப்பட்டது) : கத்தரிக்காய்- 30, கொத்தவரங்காய்- 26, சுரைக்காய்- 15, புடலங்காய்- 26, பாகற்காய்- 32, பீர்க்கங்காய்- 32, பூசணிக்காய்- 24, பச்சைமிளகாய் (உருட்டு)- 70, அவரைக்காய்- 60, தேங்காய்- 25, உருளைக்கிழங்கு- 30, கருணைக்கிழங்கு- 60, சேப்பங்கிழங்கு- 64, கருவேப்பிலை- 32, கொத்தமல்லி- 26, புதினா- 40, பெரிய வெங்காயம்- 27, இஞ்சி- 240, வெள்ளைப்பூண்டு- 280, பீட்ரூட்- 26, நுால்கோல்- 45, முள்ளங்கி- 22, முருங்கைபீன்ஸ்- 86, பட்டர்பீன்ஸ்- 150, சோயாபீன்ஸ்- 90, முட்டைக்கோஸ்- 30, காரட்- 46, டர்னிப்- 30, சவ்சவ்- 22, காலிபிளவர்- 30, கிரை வகைகள்- 25.

Tags:    

Similar News