தேனி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவு: கிலோ ரூ.40க்கு விற்பனை
1 kg Tomato Price Today - தேனி மார்க்கெட்டில் கிலோ ரூபாய் 40 என தக்காளி விலை குறைந்துள்ளது.;
பைல் படம்.
1 kg Tomato Price Today - தேனி மார்க்கெட்டில் கடந்த ஆண்டைப்போல் கடந்த மாதமும் தக்காளி விலை கிலோ 120 ரூபாயினை தொட்டது. தொடர்ச்சியாக தக்காளி வரத்து அதிகரித்ததால், விலை சற்று குறைய தொடங்கியது. மெல்ல, மெல்ல குறைந்து இன்று காலை நிலவரப்படி உழவர்சந்தையில் விலை கிலோ 40 ரூபாயினை தொட்டது.
சில்லரை மார்க்கெட்டில் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல் கிலோ ரூ.15க்கும் கிழே சென்ற சின்னவெங்காயம் படிப்படியாக உயர்ந்து உழவர்சந்தையில் இன்று கிலோ 30 ரூபாயினை தொட்டது. இரண்டாம் ரகம் கிலோ ரூ.25 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில்லரை மார்க்கெட்டில் கிலோ 25 முதல் 35 வரை விற்கப்படுகிறது.
ஒரு சில காய்கறிகளை தவிர இதர அனைத்து காய்கறிகளின் விலைகளும் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது என சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உழவர்சந்தை விலை நிலவரம்:
கிலோவிற்கு ரூபாயில்: கத்தரிக்காய்- 30, வெண்டைக்காய்- 30, கொத்தவரை-30, சுரைக்காய்- 12, புடலங்காய் 18, பாகற்காய்- 50, பூசணிக்காய்- 18, உருளைக்கிழங்கு- 34, புதினா- 35, கொத்தமல்லி- 110, பட்டர்பீன்ஸ்- 100, முருங்கை பீன்ஸ்- 75, நுால்கோல்- 40, பீட்ரூட்- 30, சவ்சவ்- 30 என விற்கப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2