இயல்புக்கு வந்தது தக்காளி..! தேனி உழவர் சந்தை விலை நிலவரம்..!

நான்கு மாதங்களாக கொடிகட்டிப் பறந்த தக்காளி விலை இயல்பு நிலைக்கு வந்தது.

Update: 2023-08-17 02:08 GMT

காய்கறிகள் (மாதிரி படம்)

தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக தக்காளி விலை கொடிகட்டிப்பறந்தது. உழவர்சந்தை விலை நிலவரமே கிலோவிற்கு 160 ரூபாயினை கடந்த நிலையில், சில்லரை மார்க்கெட்டில் அதன் விலை 200 ரூபாயினை தாண்டியது. இந்த தக்காளி விலை உயர்வு விவசாயிகளுக்கு நல்ல பலனை கொடுத்தது. சில விவசாயிகள் லட்சாதிபதிகளாகவும், சிலர் கோடீஸ்வரர்களாகவும் மாறியதாக செய்திகள் வெளியாகின.

விவசாயி என்ற ஒரே காரணத்திற்காக பெண் கிடைக்காமல் இருந்ததால், திருமணம் தடைபட்டிருந்த ஆந்திர விவசாயி ஒருவர் தக்காளி விலை உயர்வால் கோடீஸ்வரராக மாறி, பல லட்சம் ரூபாய்க்கு புதிய கார் வாங்கி அந்த காரில் ஏறி தனக்கு ஏற்ற பெண் தேடி சென்றார். தக்காளி லோடு ஏற்றிச் சென்ற மினி லாரிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் கூட நடந்தன. இப்படி கூட பல சுவாராஸ்ய சம்பவங்களும் தக்காளி விலை உயர்வால்  நடந்தன.

இந்நிலையில் வெயில் அதிகரித்தது. வெயில் அதிகரித்தாலே தக்காளி விளைச்சல்  அதிகரிக்கும். நாடு முழுவதும் தக்காளி விளைச்சல்  அதிகரித்தது. இதனால் உள்நாட்டில் தக்காளி விலை குறைந்தது. அனைத்து இடங்களிலும் விலை 40 ரூபாய்க்கும் கீழே வந்தது.

ஒட்டன்சத்திரம், பழனி மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு வந்து விட்டது. தேனி மார்க்கெட்டில் (ஆக.,17) இன்றைய நிலவரப்படி விலை கிலோவிற்கு 40 ரூபாய் ஆக குறைந்துள்ளது. இரண்டாம் ரக தக்காளி கிலோ 25 ரூபாய்க்கு கூட தரத்  தயாராக உள்ளனர்.

ஆக தக்காளி விலை  இயல்பு நிலைக்கு வந்துவிட்டது.  அதேபோல் சின்னவெங்காயமும் கிலோ 50 ரூபாய் என்ற அளவில் இறங்கி விட்டது. தக்காளி, சின்ன வெங்காயம் மட்டுமல்ல அத்தனை காய்கறிகளின் விலைகளும் இறங்கி விட்டன. இதனால் விளைவித்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். ஓரிரு நாட்கள் மட்டும் விவசாயிகளின் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்தது. பெரும்பாலும் தக்காளி விலை, சின்னவெங்காயம் விலை உயர்வின் பலன்களை இடைத்தரகர்கள் தான் அனுபவித்தனர். இந்நிலையில் விலை மிக குறைந்து விட்டதால் விவசாயிகள் பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளது.

ஆக., 17ம் தேதி தேனி உழவர்சந்தை விலை நிலவரத்தை பார்க்கலாம். கிலோவிற்கு ரூபாயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தரிக்காய்- 24, வெண்டைக்காய்- 18, கொத்தவரங்காய்- 18, சுரைக்காய்- 15, புடலங்காய்- 28, பாகற்காய்- 16, பீர்க்கங்காய்- 30, முருங்கைக்காய்- 24, பூசணிக்காய்- 18, செடி அவரைக்காய்- 35, தேங்காய்- 25, உருளைக்கிழங்கு- 45, கருணைக்கிழங்கு- 60, சேப்பங்கிழங்கு- 60, கருவேப்பிலை- 26, கொத்தமல்லி- 22, புதினா- 35, பெல்லாரி- 32, வாழை இலை- 40, பீட்ரூட்- 28, நுால்கோல்- 28, முள்ளங்கி- 20, முருங்கை பீன்ஸ்- 55, பட்டர்பீன்ஸ்- 130, முட்டைக்கோஸ்- 30, கேரட்- 35, சவ்சவ்- 24, காலிபிளவர்- 30, பச்சைபட்டாணி- 110, சேம்பு- 45, எலுமிச்சை- 65, பப்பாளி- 25, மாம்பழம்- 50, அனைத்து கீரை வகைகள்- 25. இவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News