தேனி மாவட்டத்தில் மீண்டும் சதம் கடந்தது தக்காளியின் விலை
தேனி மாவட்டத்தில் தக்காளி விலை மீண்டும் நுாறு ரூபாயினை தாண்டி உள்ளது.
தேனி மாவட்டத்தில், கடந்த வாரம் கிலோ 120 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி, இடையில் படிப்படியாக விலை குறைந்து, கிலோ ரூபாய் 60 வரை வந்தது. இந்நிலையில் மீண்டும் மழை அதிகரித்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, தக்காளி விலை அதிகரித்துள்ளது.
நேற்று மாலை சந்தைக்கு தக்காளி வரத்து 90 சதவீதம் வரை குறைந்து விட்டது. இன்று தேனி உழவர் சந்தையில் தக்காளி கடைகள் திறக்கப்படவில்லை. காரணம் தக்காளி இல்லை. விற்பனைக்கு தக்காளி கிடைக்கவில்லை என வியாபாரிகள் கை விரித்து விட்டனர்.
இன்று ஒரு கிலோ தக்காளி உழவர்சந்தையி்ல 100 ரூபாயினை தாண்டியது. (போர்டில் போட்டுள்ள விலை 80ரூபாய்). தேனி சில்லரை மார்க்கெட்டில் இதன் விலை கிலோ 120 ரூபாயினை எட்டி உள்ளது. தக்காளி விலை கட்டுக்குள் வர இன்னும் சில நாட்கள் ஆகும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.