உப்பார்பட்டி டோல்கேட்டில் அக்டோபர் 1ம் தேதி முதல் கட்டணம் வசூல்
Next Tollgate- தேனி அருகே உள்ள உப்பார்பட்டி டோல்கேட்டில் வரும் அக்.1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.;
பைல் படம்.
Next Tollgate- திண்டுக்கல்- குமுளி நான்கு வழிச்சாலையில், தேனி வீரபாண்டிக்கும், கோட்டூருக்கும் இடையில் உப்பார்பட்டி என்ற இடத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டோல்கேட்டில் வரும் அக்டோர் முதல் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு 50 ரூபாய், இலகு ரக வணிக வாகனங்களுக்கு 85 ரூபாய், பஸ், டிரக்குகளுக்கு 175 ரூபாய், வணிக வாகனங்களுக்கு 195 ரூபாய், கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 275 ரூபாய், கனரக வாகனங்களுக்கு 340 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.
தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிக பயன்பாடு இல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு சலுகை கட்டணத்தில் மாதாந்திர டோல்கேட் பாஸ் வழங்கப்பட உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2