தேனி அருகே பல லட்சம் மதிப்பு புகையிலை பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது
Tobacco In Tamil - தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பல லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.;
Tobacco In Tamil - தேனி அருகே பழனிசெட்டிபட்டி போலீஸ் எஸ்.ஐ., அசோக் தலைமையில் கோபாலபுரம்- கண்டமனுார் ரோட்டோரம் நின்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக தனித்தனி டூ வீலர்களில் வந்த கோபாலபுரத்தை சேர்ந்த கோபிநாத், 29, கண்டமனுாரை சேர்ந்த பிரவீன், 28 ஆகியோரை சோதனை செய்தனர்.
அவர்கள் கொண்டு வந்த மூடையில் புகையிலை பொருட்கள் இருந்தன. இவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் கோவை குனியமுத்துாரை சேர்ந்த நிசார், 25, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்த உமர் பாரூக், ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து 11 மூடைகள் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணையில் மனோஜ்குமாரை செய்தனர். இவரிடம் இருந்தும் பல மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாயினை தாண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2