கண்ணகி கோயிலுக்கு செல்லும் நேரத்தை இடுக்கி கலெக்டர் ஏன் நிர்ணயம் செய்கிறார்?
கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் சென்று வரும் நேரத்தை இடுக்கி கலெக்டர் நிர்ணயம் செய்வது ஏன் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்;
தமிழக- கேரள எல்லையில், கூடலுாரை ஒட்டி தமிழக வனப்பகுதிக்குள் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கான பாதை கேரளாவில் உள்ளது. இதனால் விழா கொண்டாட்டங்களை இரு மாநில அதிகாரிகளும் கலந்து பேசி முடிவு செய்கின்றனர். இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இடுக்கி, தேனி கலெக்டர்கள் பங்கேற்றனர்.
அதன் பின்னர் கண்ணகி கோயிலுக்கு வழிபட செல்பவர்களை காலை 7 மணி முதல் பிற்கல் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்க முடியும் என இடுக்கி கலெக்டர் தெரிவித்தார். இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முழுக்க தமிழக எல்லையில், தமிழகத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள கண்ணகி கோயிலுக்கு செல்ல இடுக்கி கலெக்டர் நேரத்தை ஏன் நிர்ணயம் செய்கிறார். அவர்களது பாதை வழியாக செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டும், ஆனால் தமிழக வனப்பகுதி வழியாக பக்தர்கள் இரவு ஆறு மணி வரை செல்லலாம் என தேனி கலெக்டர் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.