தேனியில் பெண்ணை கீழே தள்ளிவிட்டு செயின் பறித்துச் சென்ற கும்பல்

Gold Robbery - தேனியில் பெண்ணை கீழே தள்ளி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-09-09 03:42 GMT
தேனியில் பெண்ணை கீழே தள்ளிவிட்டு  செயின் பறித்துச் சென்ற கும்பல்
  • whatsapp icon

Gold Robbery -  பெரியகுளம் தென்கரையை சேர்ந்த சேவியர் என்பவரது மகள் சவுமியா (வயது30.) தேனியில் ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் இவர், பணி முடித்து விட்டு பெரியகுளத்திற்கு டூ வீலரில் சென்றார். அப்போது மொபைலில் அழைப்பு வந்ததால், பெரியகுளத்தில் ஜீவன்ஜோதி தலைமையகம் அருகே இவர் நின்று கொண்டு மொபைலில் பேசினார். அந்த சமயத்தில் இவரை கீழே தள்ளி விட்ட கும்பல், இவர் கழுத்தில் அணிந்திருந்த 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 21 கிராம் செயினை பறித்துச் சென்று விட்டனர். கீழே விழுந்ததில் சவுமியாவிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News