தப்பிச் சென்ற சிறுவன் கைது மூன்று போலீசார் சஸ்பெண்ட்
போக்சோ வழக்கில் கைதாகி தப்பிச் சென்ற சிறுவனை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.;
போடி சிறைக்காடு கிராமத்தை சேர்ந்த ஆதிவாசி இன சிறுவன் போக்சோ வழக்கில் கைதானார். இவர் மதுரை சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்படும் வழியில் ஆண்டிபட்டியில் தப்பினார். இவர் தன் குழந்தையை பார்க்க வந்த போது போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் பணியில் அலட்சியமாக இருந்து சிறுவனை தப்ப விட்ட போலீஸ்காரர்கள் செல்லப்பாண்டி, தாவீது, நீலமேக கண்ணன் ஆகியோரை எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே சஸ்பெண்ட் செய்தார்.