தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழப்பு
தேனி மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பேர் பலியாகினர்.;
பெரியகுளம் வடுகபட்டி வேளாளர் கோயிலை சேர்ந்தவர் சிதம்பரம், 61. மழை பெய்து ரோடு முழுக்க ஈரமாக இருந்தது. கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிதம்பரம் தன் வீட்டு வாசலில் வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்தார். தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
வருஷநாடு அருகே துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் சதுரகிரி, 42. இவர் மயிலாடும்பாறை மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேன் ஆக வேலை பார்த்தார். இவரது தோட்டத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனை சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறினார். அப்போது மின்சாரம் தாக்கி இறந்தார்.
கம்பம் பார்க் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன், 21. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டன் தனது வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கம்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.