பெரியகுளம் கண்மாயில் மூழ்கி மூன்று பேர் உயிரிழப்பு

Latest Suicide News - பெரியகுளம் கைலாசபட்டி பாப்பியம்பட்டி கண்மாயில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-06-10 03:09 GMT

பைல் படம்.

Latest Suicide News - தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசபட்டியை சேர்ந்தவர் தர்மராஜ். கைலாசபட்டியில் முத்தாலம்மன் கோயில் விழா நடந்து வருகிறது.

இந்த விழாவிற்காக தர்மராஜ் பல்வேறு ஊர்களில் இருந்து தனது உறவினர்களை அழைத்திருந்தார். வெளியூரில் இருந்து திருவிழாவிற்கு வந்தவர்களில், மணிமாறன், 8, செல்வம், 25, சபரிவாசன், 11 மற்றும் ருத்ரன் ஆகியோர் கைலாசபட்டியில் உள்ள பாப்பிபட்டி கண்மாயில் இறங்கி குளித்துள்ளனர்.

அப்போது வழுக்கியதில் ரத்ரனை தவிர மற்ற மூவரும் நீருக்குள் மூழ்கி இறந்து விட்டனர். பெரியகுளம் தீயணைப்பு படையினர் இவர்களின் உடல்களை மீட்டனர். டி.எஸ்.பி., முத்துக்குமார், தென்கரை எஸ்.ஐ., மணிகண்டன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்மாயில் கண்ட இடங்களில் தோண்டப்பட்டு மண் அள்ளப்பட்டதால், ஆங்காங்கே திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ள காரணத்தால் மூவரும் உயிரிழந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News