காட்டுமாடு முட்டி மூன்று பேர் காயம்

தேனி மாவட்டத்தில் இன்று காலை வேலைக்கு சென்ற கணவன், மனைவி உட்பட மூன்று பேர் காட்டுமாடு முட்டி காயமடைந்தனர்.;

Update: 2022-03-20 11:03 GMT
காட்டுமாடு முட்டி மூன்று பேர் காயம்
  • whatsapp icon

வருஷநாடு அருகே பொம்மராஜபுரத்தை சேர்ந்தவர் காசிராஜன். இவர் தனது ஏலத்தோட்டத்திற்கு இன்று வேலைக்கு சென்றார். அப்போது காட்டு மாட்டிடம் சிக்கினார். பலத்த காயமடைந்த இவர், தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போடி காலனியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவரும் போடி குரங்கனி வனப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றனர். அப்போது காட்டுமாடு முட்டியதில் பலத்த காயமடைந்தனர். இவர்களும்தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News