இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே தமிழகம் வர அனுமதி
இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்ட சான்றுகளை காட்டினால் மட்டுமே தமிழகம், கேரளா இடையே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு சோதனை சாவடிகளில் கேரளாவில் இருந்து வருபவர்களில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட சான்றுகளை காட்டியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தையும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தையும் இணைக்கும் குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை, போலீசார், வருவாய்த்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்பவர்கள், கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் அத்தனை பேரும், கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என தேனி மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த வாகன சோதனைகளில் இருபுறமும் கடந்து செல்பவர்களின் மொபைல் மெசேஜ்கள், சான்றுகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.