மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு 24 மணி நேரம் இடைவிடாத அன்னதானம்

அடர்ந்த வனத்தின் நுழைவுப்பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள இந்த சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது

Update: 2022-03-02 05:15 GMT

தேனி வீரப்ப அய்யனார் கோயிலில் இரவு நேர தரிசனத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.

தேனி நகராட்சியில் இருந்து 8 கி.மீ., தொலைவில் மலையடிவாரத்தில் உள்ளது வீரப்அய்யனார் கோயில். அடர்ந்த வனத்தின் நுழைவுப்பகுதியில் மலையடிவாரத்தில் உள்ள இந்த சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத்தொடங்கினர். இன்று காலை 6 மணி வரை இடைவிடாமல் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். ஒநே நாளில் பல லட்சம் பக்தர்கள் வந்ததால் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு மிகவும் நெரிசலுடன் காணப்பட்டது. கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 500 மீட்டர் துாரத்திற்கு வரிசையாக காத்து நின்றனர். சுமார் ஒரு மணி நேரம் முதல் ஒண்ணரை மணி நேரம் வரை காத்திருந்தே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. இருப்பினும் பக்தர்கள் பொறுமையாக சாமி தரிசனம் செய்தனர்.

அல்லிநகரம் கிராம கமிட்டி, கோயில் விழாக்கமிட்டி சார்பில் காலை 6 மணிக்கு தொடங்கிய அன்னதானம்  காலை 6 மணி வரை நடைபெற்றது. பல லட்சம் பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்ர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் வழிபாடுகளும், அன்னதானமும் நடந்தது.

Tags:    

Similar News