தேனி -பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா சேதம்: 6 பேர் மீது வழக்கு
தேவாரம் பேரூராட்சி கண்காணிப்பு கேமரா, டியூப் லைட்களை சேதப்படுத்திய 6 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
தேனி மாவட்டம், தேவாரம் பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்து கண்காணிப்பு கேமரா, டியூப் லைட்களை சேதப்படுத்திய 6 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேவாரம் பேரூராட்சி அலுவலகத்தில் வேலை நேரம் முடிந்த பின் அனைவரும் சென்றுவிட்ட நிலையில் காவலாளி மட்டும் இருந்துள்ளார். மாலையில் சிலர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காலியிடத்தில் மது அருந்த வந்துள்ளனர். அப்போது அவர்களை காவலாளி தடுத்து திருப்பி அனுப்பி உள்ளார். இதனை தொடர்ந்து, சிறிது நேரத்தில் மது அருந்து விட்டு வந்த தேவாரம் சாலை தெருவை சேர்ந்த அழகேசன் மகன் முகேஷ் மற்றும் 5 நபர்கள் சேர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் 4 டியூப் லைட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இதுகுறித்து தேவாரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநயினார், தேவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முகேஷ் உள்ளிட்ட 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.