தேனி கடையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் திருட்டு: 5 பேர் மீது வழக்கு
தேனியில் கடையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்களை திருடியதாக ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.;
தேனியில் கடையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்களை திருடியதாக ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பெரியகுளம் மேலக்காமக்காபட்டியை சேர்ந்தவர் மேனகா, 29. இவர் தேனியில் உள்ள ஜவுளிக்கடையின் ஒரு பிரிவில் பட்டு, அழகுசாதனப் பொருட்கள், தையல்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் இருந்த பணம் 15 லட்சம் ரூபாய், பொருட்கள் 20 லட்சம் ரூபாய் என மொத்தம் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம், பொருட்களை ஜவுளிக்கடையில் வேலை பார்த்த சுரேஷ், பாலசுப்பிரமணி, ரஞ்சினி, மாரியப்பன், மோகன் ஆகியோர் திருடி விட்டதாக மேனகா தேனி போலீசில் புகார் செய்தார். போலீசார் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.