தேனி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் ராஜினாமா
தேனி சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் ஜெய்முருகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.;
நடிகர் சரத்குமாரின், சமத்துவ மக்கள் கட்சியின் தேனி வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜெய் முருகேசன். இவருக்கும் கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜூக்கும் பல நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்படுட்டது. இதனால் மனம் வருந்திய ஜெய் முருகேசன் தனது பதவியை ராஜினாமாக செய்வதாக அறிவித்தார். அவர் தனது ராஜினாமா அறிவிப்பை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.