தேனியில் பரபரப்பு: தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி ஊழியர்

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் மாற்றுத்திறனாளி ஊழியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.;

Update: 2022-05-02 12:21 GMT

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி பிரசவ வார்டின் மேல் ஏறி நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டிய மாற்றுத்திறனாளி ஊழியர்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் மாற்றுத்திறனாளி ஊழியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

தேனி அருகே உள்ள சிலோன்காலனியை சேர்ந்தவர் செல்வம். மாற்றுத்திறனாளியான இவர், தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தனது சூப்பர்வைசர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி, பிரசவ வார்டின் மேல்மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். போலீசாரும், மருத்துவக் கல்லுாரி பணியாளர்களும் அவரை மீட்டனர். க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News