தேனி சில்லரை மார்க்கெட்டில் பனங்கிழங்கு விலை ரூ.20 ஆக உயர்வு
தேனி சில்லரை மார்க்கெட்டில் பனங்கிழங்கு ஒன்றின் விலை 20 ரூபாய் ஆகவும், 5 கிழங்கு கொண்ட கட்டின் விலை ரூ.100க்கு விற்கப்படுகிறது.;
பனைங்கிழங்கு சாப்பிடுவது தொடர்பாக விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் அதிகம் பேர் பனைங்கிழங்கு சாப்பிட தொடங்கி உள்ளனர். இதனால் இதன் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் தேவைக்கும், விளைச்சலுக்கும் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒரு கட்டு (ஐந்து கிழங்கு கொண்டது) 30 ரூபாய் முதல் அதிகபட்சம் 40 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறி விட்டது. ஒரு கட்டு (ஐந்து கிழங்கு கொண்டது) 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது ஒரு கிழங்கு 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெரும்பாலும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து தான் தேனி மார்க்கெட்டிற்கு பனைங்கிழங்கு வர வேண்டும். தேனி மாவட்டத்தில் பனை மரமே இல்லை. இதனால் பனைங்கிழங்கு, பனை பொருட்கள் உற்பத்தியும் இல்லை. வெளிமாவட்டங்களில் இருந்து வருவதால் போக்குவரத்து செலவும் அதிகரித்து விடுகிறது. எனவே விலை அதிகரித்து விற்றால் தான் கட்டுபடி ஆகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.