விழாக்கோலம் பூண்டது தேனி ரயில்வே ஸ்டேஷன்

தேனி ரயில்வே ஸ்டேஷன் 12 ஆண்டுகளுக்கு பின்னர் விழாக்கோலம் பூண்டது.;

Update: 2022-05-26 13:25 GMT

தேனி ரயில்வே ஸ்டேஷனில் விழா திடலில் அமர்ந்திருந்த பா.ஜ.,கவினர் மற்றும் இதர கட்சியினர்.

இன்று பிரதமர் மோடி சென்னையில் இருந்தே மதுரை- தேனி ரயிலை காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இதற்காக தேனி ரயில்வே ஸ்டேஷன் விழாக்கோலம் பூண்டிருந்தது. தேனி தொகுதி எம்.பி., ரவீந்திரநாத், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், ரயில்வே அதிகாரிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அத்தனை வி.ஐ.பி.,க்களும் பங்கேற்றனர். குறிப்பாக பா.ஜ., கட்சியினர் பெருமளவில் திரண்டு வந்து இதனை மிகப்பெரிய விழாவாகவே கொண்டாடினர்.

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சிகள் தேனி ரயில்வே ஸ்டேஷனில் பல இடங்களில் ஒளிபரப்பானது. கூட்டம் மிகவும் அதிகமாக நிரம்பி வழிந்தது. மதுரை- போடி ரயில் வர காரணம் நாங்கள் தான் என அ.தி.மு.க.,வினரும், இல்லை காங்., எம்.பி., ஆருணின் முயற்சி தான் என காங்., கட்சியினரும், பா.ஜ.,வின் முயற்சியே காரணம் என அக்கட்சியினரும் நகர் முழுவதும் பேனர்கள் வைத்திருந்தனர். நாளை 27ம் தேதி முதல் தினமும் ஒருமுறை மதுரை- தேனி ரயில் வந்து செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

கட்சியினர் என்ன சொல்லிக்கொண்டால் நமக்கென்ன? 'திட்டம் வந்து பயன் தந்தால் போதும்' என்ற மக்களின் மைண்ட் வாய்ஸ் கேட்காமலும் இல்லை.

Tags:    

Similar News